Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்…. எதிர்பாராமல் நேர்ந்த விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்தார். இவர் பழனிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு பரமத்தி வேலூர் வந்துள்ளார். இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள பழைய பைபாஸ் ரோட்டில் இரவு வேளையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து சண்முகம் மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |