Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் மாவு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவில் பகுர்தீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு அரைத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் மாவு விற்பனைக்காக பகுர்தீன் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பகுர்தீன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து எதிரே மற்றோர் இருசக்கர வாகனத்தில் வந்த ஆதம் நகரில் வசிக்கும் கோகுல்நாத், தங்கப்பா நகரில் வசிக்கும் சபரி ஆகிய 2 இளைஞர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற கேணிக்கரை காவல்துறையினர் பகுர்தீன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |