Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது இவர்களது இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்தடைந்துள்ளது. இந்த விபத்தில் வீராசாமி மற்றும் பாலுசாமி ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் வீராசாமியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீராசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் நாமக்கல் மருத்துவமனையில் பாலுசாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |