Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருடப்பட்ட இருசக்கர வாகனம்…. போலீஸின் அதிரடி விசாரணை…. சிக்கிய திருடர்கள்…!!

சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து  சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து  போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் உள்ளிட்டவர்கள் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்று காலை காவல்துறையினர் இவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்தனர் செய்து சிறைப்பிடித்தனர்.

Categories

Tech |