இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலபேட்டையை சேர்ந்த முகமது சலீம் என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகமது சலீமை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.