வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறமாக இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கரவாகனத்தை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.