இருசக்கர வாகனத்தை திருடிய வரை உங்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதனைப்பற்றி முருகேசன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு நடத்தியதில் குப்புசாமி என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்து முருகேசனிடம் ஒப்படைத்துள்ளனர்.