இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தை தீயணைப்பு நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு அரவக்குறிச்சி வரை தனது சொந்த வேலைக்காக சென்றுள்ளார்.
அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கரவாகனம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹரிஹரன் காவலனியத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.