Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கே இப்படியா… இரு வாலிபர்களின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய கிருஷ்ணா புரம் பகுதியில் உள்ள ஏ.டி காலனியில் சரிதா வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த சரிதா வீரமுத்து ஜெய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா வைரமுத்துவின் வீட்டிற்கு திடீரென சென்ற அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்து மற்றும் மாயவன் போன்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிபோதையில் சரிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அதன் பின் அவர்கள் தேங்காய் உரிக்கும் ஆயுதத்தை காண்பித்து சரிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சரிதா சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயவன் மற்றும் மாரி முத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |