Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் கூட போக முடியல… பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாலையில் செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதால் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலையில் 2 நபர்கள் கத்தியால் பொதுமக்களை மிரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே பொதுமக்களை கத்தியால் மிரட்டிக் கொண்டிருந்த 2 நபர்களை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் ராஜா மற்றும் வசீகரன் என்பது தெரியவந்துள்ளது.

இதில் வசீகரன் மீது ஏற்கனவே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி பல வழக்குகள் அவர் மேல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பதும் பிறகு வெளியே வந்து தனது மாமியார் வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.

Categories

Tech |