Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’… இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர்.

டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக டிக்டாக் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த வனச்சரக அலுவலர்கள், டிக் டாக் எடுத்த இருவரையும் பிடித்து வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ 5 ஆயிரம்  அபராதம் விதித்தனர்..

Categories

Tech |