ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 23-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோதின. இதில் இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது .இந்நிலையில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவரில் 147 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 49.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 125 ரன்னில் சுருண்டது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.