அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குவைத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது .
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மஃக்பிஜுல் இஸ்லாம் 112 ரன்னும் , எஸ்.எம் மெக்ரோப் 42 ரன்னும் குவித்தனர் .
குவைத் அணி சார்பில் அப்துல் சாதிக் 3 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குவைத் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் மீட் பௌசர் ஓரளவு தாக்குப்பிடித்து 77 ரன்கள் குவித்தார் .மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இறுதியாக குவைத் அணி 25.3 ஓவரில்அனைத்து விக்கெட் இழப்புக்கு 69 ரன்னில் சுருண்டது. இதனால் 222 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.