சுல்தான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சுல்தான். இப்படத்தில் முன்னணி நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இச்செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியான சுல்தான் பட ட்ரைலர் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
#Sulthan hitting screens from April 2, censored UA @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #SulthanCensoredUA#SulthanFromApril2 pic.twitter.com/Gtus8qDPXO
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 26, 2021