உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாளையங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும் உத்தரப் பிரதேச மாநில முதல்வரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உத்திரபிரதேசத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை கண்டித்தும் எதிர்க்கட்சியினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது அடக்கு முறையைக் கையாளும் பாஜக அரசை கண்டித்து திருச்சி பாலக்கரையில் பாப்புலர் பிராண்ட் ஆப் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து உத்தரபிரதேச அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உத்திரபிரதேசத்தில் நடந்த பல படுகொலைக்கு நீதி கேட்டும் அம்மாநில அரசும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.