Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய யு.பி.எஸ்…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

யு.பி.எஸ். வெடித்து சிதறியதில் நகை மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாது புதிதாக யு.பி.எஸ். வாங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த யு.பி.எஸ். பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து மாது எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்நிலையில் மாது தனது குடும்பத்தினருடன் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.55 ஆயிரம், சான்றிதழ்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |