அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பொருள் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடல் பகுதியில் நீருக்கு அடியில் பயணம் செய்து கொண்டிருந்த அணு ஆயுதத் திறன் கொண்ட அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்தக் கப்பல் விபத்தில் 11 மாலுமிகள் பலத்த காயம் அடைந்ததாகவும், யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தற்போது கப்பல் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.