பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் காமன் டிபி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் இசை ஜாம்பவான் என பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு நபர் என்றால் அது இளையராஜா தான். அவருக்குப் பிறகு தமிழகத்தில் இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் யுவன் சங்கர் ராஜா வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பாடல்கள், மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு என அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் அருமருந்தாக இருக்கக்கூடியவை.
இவற்றில், எந்த உணர்வு நிலையில் இருந்தாலும், அதற்கேற்றார்போல் யுவனின் பாடல்கள் கட்டாயம் அமைந்திருக்கும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் இவரது பாடல்களை கேட்காத நாட்கள் இருக்காது. நம்முடன் தொடர்பில் இருக்கும் யாரேனும் ஒருவராவது இவரது பாடலை கட்டாயம் வைத்திருப்பார்கள். இந்நிலையில் யுவனின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்களுக்காக நடிகர் தனுஷ் காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது யுவனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களில் ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது என்ற பாடல் பெரும்பாலானோருக்கு பிடித்த பாடலாக இன்றைய நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு யுவனின் பாடலில் பிடித்த பாடலை பின்வருமாறு கமெண்ட் செய்யுங்கள்.