ஐசிசி அண்டர்-19 50ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் இங்கிலாந்து vs இந்தியா அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ்சில் நார்த் சவுண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பாவா, ரவிக்குமார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.
இங்கிலாந்து பேட்டிங்:
இங்கிலாந்து அணியின் ரெவ் மட்டும் 95ரன் எடுத்து ஆட்டமிழக்க, சேல்ஸ் 34* ரன்னோடு களத்தில் இருக்க ஏனைய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 44.5ஓவர்களில் 189 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் பாவா 5 விக்கெட்டும், ரவிக்குமார் 4 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.
இந்தியா பௌலிங்:
பின்னர் 190 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரகுவன்ஷி 2ஆம் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் சீரான வேகத்தில் ரன்கள் உயர ஷைக் ரஷீத் 50, நிஷாந்த் சிந்து 50* எடுக்க இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஷ் போய்ட்டேன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்ப்பின்வால் தலா 2விக்கெட் எடுத்தனர்.
இந்தியா பேட்டிங்:
இங்கிலாந்து பௌலிங்: