ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்பை ஏற்க தலீபான்களோடு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பக்கமும் நில எல்லைகளுடைய ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வழி தொடர்பிற்கு காபூல் நகரின் விமான நிலையம் முன்னிலையாக திகழ்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அந்த விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்புகளை கவனிக்க தலீபான்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன.
பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு காபூல் உட்பட பல விமான நிலையங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுப்பில் ஒப்படைக்க தலீபான்கள் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.