Categories
உலக செய்திகள்

முதன் முறையாக… தமிழருக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்…!!!

ராமநாதபுரத்தை சேர்ந்த ஹமீது யாசின் என்ற நபர் ஐக்கிய அரசு அமீரகத்தினுடைய கோல்டன் விசாவை பெற்றிருக்கிறார்.

பல துறைகளில் சிறப்பாக திகழக்கூடிய, தங்கள் நாட்டில் அதிகமாக முதலீடு செய்யக்கூடிய தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகமானது கோல்டன் விசா வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோல்டன் விசா இருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக இருக்கலாம்.

திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும், மற்ற நேரங்களிலும் சமூக சேவை செய்யும் நபர்களை கௌரவிப்பதற்காக ஹுமானிடேரியன் பயனிர் என்னும் கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, ராமநாதபுரத்தில் வசிக்கும் ஹமீது யாசின் என்பவர் மனித நேயத்துடன் செயல்பட்டதால் அவருக்கு இந்த விசா வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தமிழராக இவர் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |