ஐக்கிய அரபு அமீரகம் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தடை அறிவித்தது. இந்த தடையை வரும் 29ம் தேதியிலிருந்து நீக்குவதாக தற்போது தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஜனவரி 29ஆம் தேதியிலிருந்து எத்தியோப்பியா, நைஜீரியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே, தான்சானியா, கென்யா, காங்கோ குடியரசு, தென் ஆப்பிரிக்க குடியரசு, லெசோதோ, ஈஸ்வதினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.
எனினும் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனா அறிகுறி ஏற்பட்டால், பயணத்தை தவிர்க்க வேண்டும். மேலும் தங்கள் நாட்டிற்கு வந்த பிறகு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது மட்டுமன்றி, ஐக்கிய அமீரகத்திற்கு வந்த இரண்டு நாட்களுக்கு பின் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.