டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் இரு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் கீலாங் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் ஆடிய நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் அதே கீழா மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோத உள்ளது இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சுண்டங்கபோயில் ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி பேட்டிங் செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தயாராக இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 8 முறை மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 4 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
UAE have won the toss and opted to bat 🪙#UAEvNED | 📝 https://t.co/sD75sGYNF1 pic.twitter.com/cLRl99f7HB
— ICC (@ICC) October 16, 2022