உபர் ஆப் குறித்து தந்தை எழுதியிருந்த நோட்ஸை மகன் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
டுவிட்டரில் ராகுல் குப்தா என்ற யூசர் ஷேர் செய்துள்ள ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரம் பின்வருமாறு :-வாடகைக்கு ஆட்டோ மற்றும் டாக்க்ஷிகளை இயக்கி வரும் பிரபல நிறுவனமான உபர் ஆப்பிற்கு சென்று ஒரு வாகனத்தை எப்படி புக் செய்யவேண்டும் என்பதை அறியாத வெகுளியான தந்தை ஒருவர் தனக்கு புரியும்படி அதனை ஒரு தாளில் நோட்ஸ் எடுத்து வைத்துள்ளார்.
My dad’s notes on how to book an Uber 😇😇 pic.twitter.com/StkHxdJCAQ
— Rahul ㊗️ investing 100K$ in early stage startups (@rahulrmv) September 14, 2021
இதனை பார்த்த அவருடைய மகன் அதனை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் பரவி பெரும் வைரலாக உள்ளது. இதில் உபர் ஆப்பை எவ்வாறு கிளிக் செய்ய வேண்டும் பின்பு அதனை பயன்படுத்தி எவ்வாறு வாகனத்தை புக் செய்ய வேண்டும். என்பதற்கான படிப்படியான டிப்ஸை தன் கைப்பட எழுதி வைத்திருக்கிறார் ராகுல் குப்தாவின் தந்தை. இந்த போஸ்ட் கடந்த செப்டம்பர் 14 அன்று ஷார் செய்யப்பட்டதில் இருந்து 8 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட லைக்களையும் 500க்கும் மேற்பட்ட டுவிட்களையும் பெற்றுள்ளது.