Categories
தேசிய செய்திகள்

உபி…..டெல்லி அதிகாரிகளே…….. தெலுங்கானா போலீஸ் பார்த்து கத்துக்கோங்க…….. மாயாவதி கருத்து….!!

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை  தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல்  வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,

நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். மேலும் தெலுங்கானா காவல்துறையினரை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையினர்  முன்உதாரணமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய மாயாவதி உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகள் அரசு விருந்தினர்களை போல் நடத்தப்படுவதாகவும் இங்கு வனராஜ்யம்தான் நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

Categories

Tech |