கொலிஜியம் பரிந்துரை செய்யாததால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து திரு சஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து மூத்த நீதிபதிகள் திரு தீபக் குப்தா, திருமதி பானுமதி திரு அருண் மிஸ்ரா ஆகியோரும் ஓய்வு பெற்றனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 34 நீதிபதிகளுக்கு பதிலாக 30 நீதிபதிகள் உடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கௌஹாத்தி மத்திய பிரதேஷ் மற்றும் உத்தர்கண்ட் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த ஒரு ஆண்டாக இந்த காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் இதுவரை கொலிஜியம் எந்தப் பரிந்துரையையும் அரசுக்கு வழங்கவில்லை. எனவே நீதிபதிகள் பணியிடத்தை நிரப்புவதில் கொளஞ்சியத்தின் பரிந்துரை எதிர்பார்த்து காத்திருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.