Categories
உலக செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு …பள்ளி கல்லூரிகள் மூடல் …பெற்றோர்கள் எதிர்ப்பு…!!!

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலகநாடுகள்  முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு  எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா ,இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்த நிலையில்  இந்தியா இத்தாலி  உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  இத்தாலியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  கடந்த 24 மணி நேரத்தில் 20,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது  வரை  கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33, 76, 37 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 300 க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தற்போது வரை  கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,4,942 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவிற்கு 5 , 76, 672 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார துறைஅறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் இதனை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கைஅறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் . மாணவர் அனைவருக்கும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்றுஅரசு கூறியுள்ளது. இதனையே எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா பாதிப்பாற்காக பள்ளிகள் மூடப்பட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |