உடைமாற்றும் அறையில் கேமரா வைத்த நடிகையை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் திரையுலகை சேர்ந்தவர் குஷ்பு என்ற நடிகை. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் லாகூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் குஷ்பு தனது சக நடிகைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கும் மற்ற நடிகைகளுக்கும் இடையே நிகழ்ச்சிக்கு முன்னதாக வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் மற்ற நடிகைகள் அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வெளியேற்றியுள்ளனர். இதன் காரணமாக கோபமடைந்த குஷ்பு திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சுமார் 1,00,000 ரூபாய் பணம் கொடுத்து உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்த சொல்லியுள்ளார்.
இது தெரியாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைகள் உடைமாற்றும் அறைக்கு சென்று ஆடைகளை மாற்றியுள்ளனர். அதனை அங்கு பொருத்தியுள்ள கேமரா மூலமாக பதிவு செய்துள்ளார். மேலும் அதனை வைத்து அவர்களை மிரட்டியுள்ளார். குறிப்பாக அந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது இணையத்தில் பகிரப்பட்டு அனைவரிடத்திலும் வைரலாக பரவியது. இந்த நிலையில் அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குஷ்புவிற்கு துணையாக இருந்த கஷிபா சென் என்பவரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும் நடிகை குஷ்பு தன்னை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. மேலும் வருகின்ற 21 ஆம் தேதி வரை அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆதலால் அதற்கு பின்னரே குஷ்புவை போலீசார் கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது.