Categories
தேசிய செய்திகள்

உடைந்த கால்களுடன் போராடுவேன் …பாஜக விற்கு எதிராக பிரச்சாரத்தில் …மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு …!!!

கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அணி தேர்தலில் எங்களோடு மோதினால் ,ஒரு அங்குலம் கூட  முன்னேறி செல்ல முடியாது என்று கூறினார்.   

மேற்கு வங்காளதில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ,  அம்மாநில  முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் பங்குரா  இடத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில்,பாஜக கட்சியை பற்றி  பேசியுள்ளார். அவர் பேசியதில், பாஜக ஆட்சியானது மேற்கு வங்காளத்திற்குரிய  கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க  முயற்சித்து வருகிறது. இதைத் தவிர பாஜக ஆட்சியில் பொது மக்களின் உணவு பழக்கம் ,ஆடை அலங்கரிப்பு போன்ற  அடிப்படை வசதிகளை கூட அவர்கள் சொல்வது படியே  செய்ய வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி ஒருவர் முட்டை சாப்பிடுவது நர மாமிசம் சாப்பிடுவதற்கு சமம் என்றும், கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். எனவே இப்படிப்பட்ட பாஜகவினரிடம் ,மேற்கு வங்காளத்தை  ஒப்படைத்தால், மாநிலம் என்ன  கதிக்கு ஆளாகும் என்று பொதுமக்கள் சிந்தித்துப் பாருங்கள். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில், பாஜக கட்சி தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே பரப்பி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் பிரதமர்  ரூபாய் 15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ,என்று கூறியதை நிறைவேற்றினாரா? என்று கேட்டார்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி , பெண்களுக்கு என்று பல்வேறு சிறப்பு  திட்டங்களும், வேலை வாய்ப்பு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. எனவே  மேற்கு வங்காளத்தில் பாஜக அணி எங்களோடு  மோதினால் ,  ஒரு அங்குலம் கூட  முன்னேறி செல்ல  முடியாது என்று சவால் விடுத்துள்ளார். எனவே மேற்கு வங்காளத்தை காப்பாற்ற ,உடைந்த என் ஒற்றை காலை வைத்து போராடி வருகிறேன். இந்த போராட்டத்திலிருந்து ஒருபோதும்  பின்வாங்க மாட்டேன் என்று  தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |