வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருகின்றார். இவர்களுக்கு சொந்தமாக வேலூரில் இருந்த வீட்டு மனையை கடந் சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டனர். எனவே வீட்டுமனை விற்ற பணத்தில் இருந்து 5 1/2 லட்சத்தை குடியாத்தம் அருகில் லட்சுமணாபுரம் பகுதியில் வசிக்கும் பார்வதியின் தாயார் ராணியிடம் கொடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் ராணி அந்த பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.
இதில் ராணியின் கணவர் கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இதனைடுத்து பிச்சனூர் பகுதியில் ராணி நெசவுத் தொழில் செய்து வருகின்றார. அதன்படி காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் நெசவு செய்ய ராணி சென்றுள்ளார். இதனைதொடர்ந்து மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 1/2 லட்சத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராணி தனது மகள் பார்வதி மற்றும் மருமகன் சுரேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.