பாலிவுட் முன்னணி நடிகை மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் சென்று உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் மும்பை வீதிகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பிரதான சாலையில் கருப்பு நிற டீசர்ட், மாஸ்க், கிளவுஸ், தொப்பி அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டியுள்ளார். இது போலவே நடிகர் சல்மான்கானும் தெருக்களில் சைக்கிள் ஒட்டி உடற்பயிற்சி செய்து வருகிறார். மற்றொரு பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் சண்டிகரின் சாலைகளில் சைக்கிள் ஓட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறார். ஊரடங்கிற்கு முன்பு இருந்தே நீண்ட வருடங்களாக தமிழகத்தில் அதிகாலையிலே சாலைகளில் சைக்கிள் ஒட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருபவர் நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.