உடலின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஒட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் இந்தியாவின் 65-வது சுதந்திர போராட்டத்தின் தொடர்ச்சியாக நேரு யுவகேந்திரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆற்காடு பகுதியில் இருக்கும் இந்திய புராதான சின்னம் டெல்லி கேட் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட ஓட்டத்தை துணிநூல், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்ட உடற்பயிற்சி கூட இளைஞர்கள் பாலாறு மேம்பாலம் வழியாக இம்மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளனர். அதன்பின் இந்த ஓட்டத்தில் நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.