Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு… உடல் குளிர்ச்சிக்கு.. சூப்பரான லெமன் சோடா..!!

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமல்லவா.? எளிய முறையில் லெமன் சோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை:

எலுமிச்சை காய்                        – 2
எலுமிச்சை பழம்                       – 3
சர்க்கரை                                      – 1 கப்
தண்ணீர்                                       – 3 டம்ளர் அளவு
எலுமிச்சை தோல் துருவல்  – ஒரு  டீஸ்பூன்
சோடா வாட்டர்                          – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை தோல் துருவல் ஆகிய இரண்டையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் அளவு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் இறக்கி ஆறவைத்து கொள்ளுங்கள்எ. ஆறியதும் அதில் எலுமிச்சை பழம் மற்றும் காய் இரண்டின் சாற்றையும் விதை இல்லாமல் பிழிந்து விட்டு அதை எடுத்து  ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகுங்கள்.  சூப்பரான லெமன் சோடா  ரெடி..!

Categories

Tech |