19 வயதுடைய ஆண் வரி கழுதைப்புள்ளி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பூங்காவை நாள்தோறும் பல ஊர்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதுடைய வெங்கட் என்ற ஆண் வரி கழுதை புலி உடல் நலக் கோளாறு காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்தது.
இதற்கு பூங்கா கால்நடை மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் வயது முறிவு மற்றும் உடல் உறுப்பு செயலிழந்த காரணத்தினால் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து இறந்த வரி கழுதைப்புலியின் உடலை பூங்கா மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். பிறகு கழுதைப்புலியின் உடலை பூங்கா வளாகத்தில் இருக்கும் நவீன எரியூட்டு மையத்தில் தகனம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உடல்நலக்குறைவால் வரி கழுதைப்புலி உயிரிழந்ததை தொடர்ந்து பூங்காவில் இருக்கும் பிற விலங்குகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு பூங்கா மருத்துவர்கள் அனைத்து விலங்குகளையும் 24 மணி நேரமும் ஊழியர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்துள்ளது. பின்னர் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து பூங்காவில் தொடர்ந்து காட்டுப்பன்றி, சாம்பல் மான், வரிக்குதிரை, சிங்கம், சிறுத்தை, புலி, காட்டுமாடு உட்பட பல விலங்குகள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது.