ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆகஸ்ட் மூன்றாம் தேதி திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் அலைபேசி மூலமாக பேசியுள்ளார். அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்புடைய வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு சட்டம் உருவாக்கலாம்.
மேலும் அத்தகைய சட்டத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அலுவலர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய மூன்று தரப்பு குழுக்களும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு இட ஒதுக்கீடு வழங்குகின்ற நடைமுறைகள் பற்றி விரைவில் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு இத்தகைய முடிவை வருகின்ற மூன்று மாதங்களுக்குள் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.