Categories
தேசிய செய்திகள்

உடனே ஊரடங்கு அமல்படுத்துங்கள்?… கடும் கட்டுப்பாடுகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

 மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்பை மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் மந்திரி உத்தவ் தாக்கரே  மண்டல கமிஷனருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில் மந்திரி உத்தவ் தாக்கரே நோய் பரவுவதற்கான தடுப்பு நெறிமுறைகளை கடுமையான முறையில் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் நோயினால் பாதித்தவர்களை கண்டறியும் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்.மேலும் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேருக்காவது தடுப்பூச செலுத்துவதை இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 134 தனியார் மருத்துவமனைகளை அனுமதிதுள்ளதாக தெரிவித்தார். வெப்பம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாந்தெட் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அனைத்து வழிபாட்டு தலங்களையும் வருகிற 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |