நம்முடைய உடலுக்கு யோகாசனமானது மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் யோகாசனத்தை செய்வதற்கு சிலருக்கு நேரமே கிடைக்காது. எனவே உங்களுடைய வேலை நேரத்தின் போது நாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம்.
பூனை மாடு முறை: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் முதுகை தரையை நோக்கி வளைத்து கன்னமானது மார்பு பகுதியை தொடுமாறு கீழே நோக்கி குனிய வேண்டும். அதன்பின் 2 கைகளையும் கீழே தொங்க விட வேண்டும். இதனையடுத்து மூச்சை உள்வாங்கும் போது வயிற்றை உள்ளிழுத்து, முதுகை வளைக்க வேண்டும். நீங்கள் மூச்சை வெளியே விடும்போது தலையை தலை நோக்கி நகர்த்த வேண்டும். இந்த யோகாசனம் தான் பூனை மாடு முறை ஆகும்
அமர்ந்துகொண்டே திரும்பும் யோகாசனம்: இது ஒரு எளிமையான யோகாசனம் ஆகும். இதற்கு உங்களுடைய இடதுகையை வலது முழங்காலின் மேல் வைத்துக் கொண்டு, வலது கையை நாற்காலியின் பின்புறத்தில் தொங்கவிட வேண்டும். அதன் பின் உடலை வலது தோல் பட்டைக்கு மேலே திருப்பிக் கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுக்க வேண்டும். இதனையடுத்து முதுகெலும்பை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து வைத்து மூச்சை வெளியில் விட வேண்டும். இதுதான் அமர்ந்துகொண்டே திரும்பும் யோகாசனம் ஆகும்.
அமர்ந்த நிலையில் மார்பு பயிற்சி யோகாசனம்: இந்த யோகாசனத்தை செய்யும்போது நாற்காலியில் முன் பக்க விளிம்பில் அமர்ந்து கொண்டு கைகளை முதுகுக்குப் பின்னால் இணைக்க வேண்டும். அதன் பின் மூச்சை உள்வாங்கி கொண்டு கைகளை மேலே தூக்கி என் கன்னத்தை மார்பு பகுதியிலிருந்து நிமிர்த்தி சுவாசத்தை வெளியில் விடும்போது கைகளைக் கீழே இறக்க வேண்டும். இதை ஒரு சுவாசத்திற்கு 2 முறையாவது செய்து, கைகளை பிடியை மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
இடுப்பு தடுப்பு முறை யோகாசனம்: இதற்கு முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இடது முழங்காலை வளைத்து வலது முழங்காலின் மேல் வைக்க வேண்டும். இதனையடுத்து நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். அதன் பின் மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியில் விட வேண்டும். இதுதான் இடுப்பு தடுப்பு முறை யோகாசனம் ஆகும்.
முன்னோக்கி அமருதல் யோகாசனம்: இதற்கு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கைகளைத் தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் உடலை கால்களுக்கு மேல் இழுத்து தலையானது கீழே தரையில் படும்படியாக வைக்க வேண்டும். இதனையடுத்து கைகளை தரையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்த யோகாசனம் செய்வது கடினமாக இருக்கலாம். எனவே முன்நோக்கி அமருதல் யோகாசனத்தை செய்யும்போது உங்களுடைய உடம்பில் வலி ஏற்பட்டால் அதை செய்ய வேண்டாம்.