சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
வருகின்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதை அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தயாநிதி மாறன் சொன்னதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. அந்த தகுதி தலைவருக்கும், தமிழக மக்களுக்கும் உள்ளது என்று தெரிவித்தார். தயாநிதிமாறனின் இந்த கருது சீனியர் நிர்வாகிகளை முணுமுணுக்க வைத்துள்ளது.