உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் உதயநிதி செயலாளராக அறிவிக்கப்பட்டத்தை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பேசிய திமுக_வின் பொருளாளர் துரை முருகன் கூறுகையில் , இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு இது என்று தெரிவித்துள்ளார்.