Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி மகனுக்கு பொறுப்பு….புதிய அணி உருவாக்கும் ஸ்டாலின்…அமைச்சர் விமர்சனம்…!!

அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக,  திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக கட்சியில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது.

அந்த கட்சியில் உள்ளவர்கள்  ஏற்பார்களா என்றால் நிச்சயமாக ஏத்துக்க மாட்டாங்க.திமுக_வில் ரொம்ப காலமா இருக்கின்ற தொண்டர்கள் தங்க தமிழ்செல்வனுக்கு  பதவி கொடுத்தது குறித்து விமர்சிப்பார்கள்.இது ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பமாகி விட்டது.  எனவே திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் வரலாம், உதயநிதி ஸ்டாலினை  எம்ஜிஆர் அணி செயலாளராக மாற்றுவார். உதயநிதி ஸ்டாலினின்  பையனுக்கு ஒரு அணியை உருவாக்கி  கொடுப்பார்  ஸ்டாலின் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் எந்த தேக்கமும் இல்லை அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள். MGR மாபெரும் வெற்றி கண்ட1975 லிருந்து 85 வரை திமுக கோட்டை பக்கம் வரல. தற்போது 2012_இதில் தொடங்கி தற்போது வரை திமுக வர முடியல. ஸ்டாலின் தோப்புக்கர்ணம் போடலாம் இந்த ஆட்சி  2021_யை முழுமையாக கம்யூனிட் செய்து விடும். 2021_இல் நடக்கும் தேர்தலில் ஜனநாயக ரீதியாக நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் அம்மாவோட ஆட்சியை நிலை நிறுத்துவோம்.

Categories

Tech |