இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து மிகப் பெரும் எழுச்சி மாபெரும் வெற்றி என்று இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் , சட்டமன்ற தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை இரண்டு மாதத்திற்குள் இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் திமுக-வில் புதியவர்கள் வரவு என்றும் குறைந்ததில்லை என்ற உண்மை புலப்படுகிறது.இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எழுச்சிமிகு வருகை மணிக்கொருமுறை வந்து குவிந்த எண்ணிக்கையில் இருப்பதாக செய்திகள் மகிழ்வைத் தருகின்றன.
இளைஞர்கள் நம் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கைக்கு நாம் தகுதியானவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து செயல்பாடுகள் இருக்க வேண்டும்தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி உறுப்பினர் முகாமில் 17 வயது நிரம்பிய பள்ளி படிக்கும் தம்பி ஒருவர் என்னை இளைஞர் அணியில் சேர்த்தாலே போதும் என்று நம் நிர்வாகிகளுடன் விடாப்பிடியாக மல்லுக்கு நின்றான்.நான் அவருடன் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன் இந்த சம்பவம் அடுத்த தலைமுறையை இளைஞர்களின் எழுச்சியை உள் வாங்கிக் கொள்வதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.