Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்…. ஜோடி சேரும் பிரபல நடிகை…!!!

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இத்திரைப்படத்தினை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீசாக மிரட்டும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி தமிழ் சினிமாவில் வெளியான கருப்பன் திரை படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் தான் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் அவர் இப்படத்தில் ஒரு ஊடக நிருபர் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |