Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. உதயநிதி ஸ்டாலினின் ”நெஞ்சுக்கு நீதி”….. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…..!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”.  திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

Nenjukku Neethi Teaser Released - The True Incident Background? | நெஞ்சுக்கு  நீதி டீசர் ரிலீஸ் - உண்மைச் சம்பவத்தின் பின்னணி? | Movies News in Tamil

மேலும் இந்த படத்தில் ஷிவானி, ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற மே 20ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |