வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல, தமிழ்நாட்டுக்கு என்று எந்த ஒரு இடர்பாடுகள் வந்தாலும், சென்னையில் எப்படி நீங்க பணியாற்றுகின்றீர்களோ அதே போன்று நாங்களும் எங்க எங்க பகுதியில் பணியாற்றுவோம் என்பதை உறுதி சொல்லுகின்ற நிகழ்வாகவும், இந்த நிகழ்வை நான் பார்க்கின்றேன். ஏற்கனவே கடந்த கூட்டத்தில் நான் சொன்னது மாதிரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்வில் கலந்துகொண்டு இருக்கின்றேன் என்று சொன்னாலும், இந்த மாவட்டத்தில் மினிட் புக்கில் தான் என்னுடைய கையெழுத்து அதிகமாக இருக்கும் என்று சொல்லுகின்ற அளவிற்கு,
எனக்கு தொடர்ந்து இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி கொண்டு இருகின்றனர் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை செல்ல கடமைப்பட்டுள்ளேன். நவம்பர் 27 அன்று நடந்த நம்முடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உடைய சட்டமன்ற உறுப்பினர் இங்கே அண்ணன் தாயகம் கவி அவர்கள் சொன்னது போல, நாங்க எல்லாம் அன்போடு சின்னவர், சின்னவர் என்று அழைக்கக் கூடியவர்கள் மட்டுமல்ல, எங்களை வழி நடத்துகின்ற அடுத்தரும் அவர் தான் என்பதை பறைசாற்றுகின்ற நிகழ்வாக இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அவருடைய பிறந்தநாளை ”எளியோரின் எழுச்சி நாளாக” தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.