Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை DMK தலைவராக வரப்போகும் Udhayanidhi Stalin.. 5 வது தலைமுறையை.. Duraimurugan அதிரடி..!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர்.

நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஒரு லிமிடெட் கொள்கையோடு தான் அவர்கள் இருப்பார்கள், ஆனால் நாம் மதத்திலும் கொள்கை வைத்திருக்கிறோம், சமுதாயத்திலும் கொள்கை வைத்திருக்கிறோம், மொழியிலும் கொள்கை வைத்திருக்கிறோம், இனத்திலும் கொள்கை வைத்திருக்கிறோம்,

எல்லாவற்றிற்கும் கொள்கை வைத்திருக்கின்றோம். ஆகையால் தான் சில நேரத்தில் பல பேருக்கு நம்மை பிடிப்பது இல்லை. ஆனால் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன்.  ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை,  வயசாகி விட்டது.  நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |