Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட சொன்ன உதயநிதி…! ஐடியா கொடுத்த ஸ்டாலின்… பக்கா பிளான் போட்ட DMK இளைஞரணி ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. தலைவரிடத்தில் நான் சொன்னேன்.  காஞ்சிபுரத்தோடு  234 தொகுதி முடிய போகுது. உங்களிடத்தில் ஒரு தேதி வேண்டும்.  அந்த பேச்சாளர்களை எல்லாம் அழைத்து நீங்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றேன்.

ஏன்னென்றால் இது சாதாரண விஷயம் இல்லை. அஞ்சரை மாசத்துல 234 தொகுதியில 270 பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அப்போ தலைவர் அவர்கள் சொன்னார். நான் பாராட்டு விழாவிற்கு  தேதி கொடுக்கிறேன். ஆனால் இது முடிவு அல்ல. இங்கு இருந்து ஆரம்பிங்க. அடுத்து ஒவ்வொரு ஒன்றியமாக….  அடுத்து ஒவ்வொரு வார்டாக மீண்டும் இந்த பயிற்சி பாசறை 2.O அப்படிங்கற விஷயத்தை ஆரம்பிக்கணும் என்று இருக்கிறார்கள்.

அதையும் சிறப்பாக வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதற்கு இந்த பயிற்சி பாசறை கூட்டம் ? இதை ஆரம்பித்த பொழுது முதல் விமர்சனம் எழுதுனது  தினமலர். அப்பொழுது நான் நினைச்சேன்,  சரி நாம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று..

வாரத்திற்கு ஒரு மூன்று கட்டுரை நம்முடைய பயிற்சி பாசறையை விமர்சித்து….. அப்பொழுதுதான் நாம்செல்லுகின்ற பாதை சரியான பாதை தான், இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று அந்த உந்துதல் சக்தியை கொடுத்த தினமலருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Categories

Tech |