திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருடைய பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழா முடிவடைந்த பிறகு அமைச்சர் உதயநிதிக்கு குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் அமைச்சரானதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த கிருத்திகா அவரை கட்டி அணைத்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க தொடங்கிய உதயநிதி மற்றும் கிருத்திகா பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கிருத்திகா தற்போது இயக்குனராக இருக்கிறார். மேலும் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.