செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர். இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு… ராசாவை கைது பண்ணு என்று…
ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி திருமாவளவன் ஆதரிக்கிறார். ஆகவே இந்த தீய சக்திகள் அடுத்த முறை அரசியல் களத்தில் அவங்க நிக்கிறதுக்கே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கணும். அந்த அளவுக்கு இவர்கள் இந்துக்களுக்கு எதிர்ப்பு. திமுகவின் கடைசி மன்னன் இந்த ஸ்டாலின் அப்படின்னு ஆகும்.
சின்னவர் என்று சொல்ல சொன்னாரா ? சின்னவர் எல்லாம் இல்ல. அது ஒன்னும் நடக்காது. அதனால மிகக் கேவலமான கீழ்த்தனமான ஒரு அரசியல் கட்சி இந்த உலகத்திலே உண்டு என்றால் அதை திமுக அப்படிங்கறது நிரூபணமாயிருக்கு. திமுக போடுற ரோடெல்லாம் மோசமா இருக்கு. இந்த அரசாங்கம் இன்னைக்கு தமிழ்நாட்டுல செயல்பட்டுட்டு கொண்டு இருக்கு திட்டங்கள், ரேஷன், அரிசி பருப்பு முதல் கொண்டு… மத்திய அரசு திட்டம் தான்.
இந்த மாநில அரசாங்கம் செயல்படாத அரசாங்கம் தான். திமுகவினர் ஆட்சிக்கு வடிந்தால் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என சொன்னாங்க. மாசம் மாசம் குடுத்து இருக்காங்களா? இங்கே என்ன நடக்குது ? வீதிக்கு வீதி படுகொலைகள் நடக்குது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆகவே மிக மோசமான அரசாங்கம். அதனால திசை திருப்பதற்காக ராஜாவை தூண்டி விட்டார்களோ, அப்படின்னு தெரியல? பாப்போம், மக்களையே அணுகுவோம் என தெரிவித்தார்.