Categories
அரசியல் மாநில செய்திகள்

Udhayanidhi யின் தகுதிக்கு கிடைத்த பதவி.. BJP யில் இல்லையா வாரிசு அரசியல்… கொந்தளித்த TKS Elangovan!!

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை.

ஒன்றே குலம்,  ஒருவனே தேவன் என்று  எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் நிறுத்தி அரசியல் செய்கிறோம்.  மனுதர்மத்தை எதிர்த்து,  மக்கள் சமத்துவத்தை,  தமிழர்களின் பண்பாடான பிறப்புக்கும் எல்லா உயிர்க்குமான என 2000 ஆண்டுகளுக்கு முன்பாக  வள்ளுவர் சொன்ன தமிழரின் பண்பாட்டை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

உதயநிதி பதவியேற்பு விழா முடிசூட்டு விழா இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றத்தை முடிசூட்டு விழா என்று சொல்லுவாரா ?அவர் பதவி ஏற்கும் பொழுது முடிசூட்டு விழா என்று சொல்வாரா ? சங்கரமடம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான் தலைவராக வரமுடியும். குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர் தான் வர முடியும்.  இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இப்பொழுது இந்த சூழ்நிலைக்கு  சங்கரமடத்தை வம்புக்கு இழுப்பதற்கு நான் தயாராகவில்லை. ஆனால் அந்த சிந்தனைக்கு எதிரான நங்கள், சமத்துவ  சிந்தனையாளர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |