Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி செய்த ஒரே சாதனை”…. காக்கா பிடித்து வாழும் அமைச்சர்…. திமுகவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுவார். மு.க ஸ்டாலின் நன்றாக வசனம் பேசுவார்.

அதைப் பற்றி எல்லாம் பேசாமல் நீங்கள் எப்போதும் உட்கட்சி பூசல்கள் குறித்து மட்டுமே பேசுகிறீர்கள். பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி செய்த ஒரே சாதனை ஹன்சிகாவை காதலித்து அவர் பின்னால் சுற்றி திரிந்தது மட்டும்தான். எங்கள் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காக்கா பிடித்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். முல்லைப் பெரியாறு திட்டம் அடுத்த வருடம் முடிவடையும் என்று துரைமுருகன் கூறியது போன்று முடிவடையாவிட்டால் மதுரையில் மிகப்பெரிய போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படும் என்று கூறினார்.

Categories

Tech |